/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கையில் 4 பேருக்கு குண்டாஸ்
/
சிவகங்கையில் 4 பேருக்கு குண்டாஸ்
ADDED : மார் 25, 2025 09:52 PM
சிவகங்கை : சிவகங்கையில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 4 பேரை குண்டர் தடுப்பு காவலில் வைக்க எஸ்.பி., பரிந்துரையின் பேரில் கலெக்டர் ஆஷா அஜித் உத்தரவிட்டார்.
துாத்துக்குடி மாவட்டம் உடன்குடி பகுதியை சேர்ந்தவர் முருகேசன் மகன் சுரேஷ்குமார் 45. இவர் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதியை சேர்ந்த 11 பேரிடம் தான் ஆவின் மேனேஜர் எனவும் ரூ.2 லட்சம் கட்டினால் ஆவின் பால் பூத் ஏஜன்சி உரிமம் பெற்றுத்தருவதாக ஆசைவார்த்தை கூறி ரூ.19 லட்சத்து 41 ஆயிரத்தை 11 பேரிடம் வசூலித்தார்.
பின்னர் மீண்டும் பணம் கேட்கவும் தான் ஏமாற்றம் அடைந்ததை உணர்ந்த சிலர் சிவகங்கை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தனர்.
போலீசார் சுரேஷ்குமாரை கைது செய்தனர். இவர் உட்பட தேவகோட்டை டவுன் போலீஸ் ஸ்டேஷனில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய தேவகோட்டை புதுத்தெரு சலீம் மகன் முகமது இஸ்மாயில் 24. மானாமதுரை போக்சோ வழக்கில் தொடர்புடைய சிவகங்கை குட்டித்தினி இந்திரா நகர் சுந்தரம் மகன் ராமு 46, திருப்பாச்சேத்தி போலீஸ் ஸ்டேஷனில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ஆவரங்காடு பாலசுப்ரமணி மகன் சுரேஷ்பாபு 20 ஆகிய 4 பேரை குண்டர் தடுப்பு காவலில் அடைக்க எஸ்.பி., ஆஷிஷ் ராவத் பரிந்துரையின் பேரில் கலெக்டர் ஆஷா அஜித் உத்தரவிட்டார்.