/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ரம்ஜான், பங்குனி விழா: கிடாக்கள் விலை உயர்வு
/
ரம்ஜான், பங்குனி விழா: கிடாக்கள் விலை உயர்வு
ADDED : மார் 25, 2025 09:52 PM
திருப்புவனம: திருப்புவனம் கால்நடை சந்தையில் ரம்ஜான், பங்குனி திருவிழாக்களை முன்னிட்டு பக்தர்கள் நேற்று ஆடு, கோழி வாங்க குவிந்ததால் விலை உயர்ந்து காணப்பட்டது.
10 கிலோ எடை கொண்ட ஆடு 8 ஆயிரத்தில் இருந்து 12 ஆயிரம் ரூபாய்க்கும் 20 கிலோ எடை கொண்ட கிடா 23 ஆயிரத்தில் இருந்து 28 ஆயிரம் ரூபாய்க்கும் சேவல் ஜோடி (2கிலோ) 300ல் இருந்து 450 ருபாய்க்கும் விற்பனையானது.
திருப்புவனம் சந்தைக்கு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து கொண்டு வரப்பட்டிருந்தன. அதிகாலை ஐந்து மணி முதல் சந்தை விறுவிறுப்பாக நடந்தது. ரம்ஜான், பங்குனி விழாக்களுக்கு கிடா, சேவல் தான் அதிகளவில் தேவை என்பதால் அவற்றின் விலை கூடுதலாக காணப்பட்டது.
சந்தைக்கு மதுரை, தேனி, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் வாகனங்களில் வியாபாரிகள் கால்நடைகள் வாங்க குவிந்திருந்தனர்.