ADDED : மார் 25, 2025 09:55 PM

திருப்புத்துார் : திருப்புத்துாரில் லெனின் கம்யூ. கட்சி சிவகங்கை மாவட்ட பேரவை கூட்டம் நடந்தது.
மாநில பொதுச் செயலாளர் ஸ்டாலின் தலைமை வகித்தார். மாநில தொழிற்சங்க அமைப்பாளர் ராஜசேகரன், மாவட்ட பொருளாளர் சண்முகவேல் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் சட்ட ஒழுங்கை நிலைநாட்ட தண்டனையை அதிகரிக்கவும், கொலை, கொள்ளை, பாலியல் தொல்லை
ஆகியவற்றை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்கவும், விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
புதிய நிர்வாகிகளாக தெற்கு மாவட்ட துணைச் செயலாளராக ரஞ்சித் குமார், வடக்கு மாவட்ட துணைச் செயலாளராக கருப்பையா, மாவட்ட பொருளாளராக சண்முகவேல், திருப்புத்துார் ஒன்றிய செயலாளராக முத்து, கல்லல் ஒன்றிய செயலாளராக கார்த்திக், சிங்கம்புணரி ஒன்றிய செயலாளராக நடராஜன், சாக்கோட்டை ஒன்றிய செயலாளராக பாண்டியன் நியமிக்கப்பட்டனர்.