/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பெண்ணிடம் நகை மோசடி கண்டக்டர் மீது வழக்கு
/
பெண்ணிடம் நகை மோசடி கண்டக்டர் மீது வழக்கு
ADDED : ஜூன் 25, 2025 07:04 AM
தேவதானப்பட்டி : பெண்ணிடம் நகை, பணம் பெற்றுக்கொண்டு மோசடி செய்த அரசு பஸ் கண்டக்டர் பாலசுப்பிரமணியம் உட்பட இருவர் மீது தேவதானப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
தேவதானப்பட்டி செக்கடிதெருவைச் சேர்ந்தவர் வேலுத்தாய் 35. டி.வாடிப்பட்டி அங்கன்வாடி மைய அமைப்பாளராக உள்ளார். பெரியகுளம் இடுக்கடிலாட் தெருவைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் 40. பெரியகுளம் வத்தலக்குண்டு (சில்வார்பட்டி வழி) செல்லும் அரசு டவுன்பஸ் கண்டக்டர். வேலுத்தாய் தினமும் இதே பஸ்சில் வேலைக்கு சென்றார். அப்போது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.
பாலசுப்பிரமணியம் தனது மனைவி பாண்டி மீனா தங்க நகை வங்கியில் ஏலம் போக உள்ளது. மீட்க பணம் கொடுத்து உதவுமாறு வேலுத்தாயிடம் கேட்டுள்ளார்.
பணம் இல்லை என வேலுத்தாய் கூறினார். பாலசுப்பிரமணியம், மனைவி பாண்டிமீனாவுடன் சென்று வேலுத்தாயிடம் பணம் கேட்டுள்ளார். ஒரு மாதத்திற்குள் திருப்பி கொடுப்பதாக கூறினார்.
வேலுத்தாய் அணிந்திருந்த ரூ.2.10 லட்சம் மதிப்பிலான மூன்றரை பவுன் தங்க செயின்,ரூ.20 ஆயிரம் கொடுத்துள்ளார்.
இந்நிலையில் நகை, பணம் திரும்ப கொடுக்காமல் மோசடி செய்யும் நோக்கில் பாலசுப்பிரமணியம் காலதாமதம் செய்துள்ளார்.
வேலுத்தாய் தொடர்ந்து கேட்ட போது, 'நகைகளை கேட்டு வந்தால் உனது வேலையை காலி செய்து விடுவேன் ,'என மிரட்டியுள்ளார்.
வேலுத்தாய் புகாரில் பாலசுப்பிரமணியம், பாண்டி மீனா மீது தேவதானப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.-