/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
துணை சுகாதார நிலையத்தில் மாணவர் துாக்கிட்டு தற்கொலை
/
துணை சுகாதார நிலையத்தில் மாணவர் துாக்கிட்டு தற்கொலை
துணை சுகாதார நிலையத்தில் மாணவர் துாக்கிட்டு தற்கொலை
துணை சுகாதார நிலையத்தில் மாணவர் துாக்கிட்டு தற்கொலை
ADDED : ஜூன் 25, 2025 07:04 AM
கடமலைக்குண்டு : தாயாருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் மகன் துணை சுகாதார நிலையத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே நக்கலப் பட்டியைச் சேர்ந்தவர் மாலதி 40, கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு கணவர் பிரகாஷ் இறந்து விட்டார். தற்போது மாலதி கடமலைக்குண்டு அருகே காமன்கல்லூரில் உள்ள துணை சுகாதார நிலையத்தில் சுகாதார செவிலியராக பணிபுரிந்து செவிலியர் குடியிருப்பில் வசித்து வருகிறார். இவருக்கு லதன் 16, என்ற மகன் உள்ளனர். லதன் குமணன்தொழு அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 வகுப்பு படித்தார். இரு நாட்களுக்கு முன் மாலதி மகனிடம் தற்போதுள்ள குடியிருப்பை காலி செய்துவிட்டு குமணன்தொழுவில் வாடகை வீட்டில் குடியிருக்கலாம் என தெரிவித்துள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த லதன், அவரது தாத்தா வீட்டில் குடியிருக்கலாம் என்று தெரிவித்துள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் வெறுப்படைந்த லதன் துணை சுகாதார நிலையத்திற்குள் சென்று கதவை மூடி சீலிங் பேனில் தூக்கிட்டு கொண்டார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் லதனை இறக்கி ஆட்டோவில் குமணன்தொழு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
அவரை பரிசோதித்த டாக்டர், லதன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். சம்பவம் குறித்து மயிலாடும்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.