ADDED : ஜன 14, 2024 04:14 AM

கம்பம்: கம்பம் நாலந்தா இன்னோவேசன் பள்ளியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. பள்ளி தாளாளர் விஸ்வநாதன் தலைமை வகித்து துவக்கி வைத்தார். மாணவ, மாணவிகள் பாரம்பரிய உடைகள் அணிந்து கலைநிகழ்ச்சிகளில்பங்கேற்றனர். பாரம்பரியமான கபடி , சிலம்பம், பன்னாங்குழி, உறியடித்தல் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. பள்ளி வளாகத்தில் 50 பானைகளில் ஆசிரியைகள் பொங்கல் வைத்தனர். குலவையிட்டு மாணவ மாணவிகளும், ஆசிரியைகளும் சூரியபகவானை வணங்கினர். பொங்கல், செங்கரும்புகளை பள்ளி தாளாளர் வழங்கினார். நிகழ்ச்சியில் தலைமை ஒருங்கிணைப்பாளர் மலர்விழி, முதல்வர் மோகன் உள்ளிட்ட ஆசிரியைகள், மாணவ மாணவிகள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை ஆசிரியர்களுடன் இணைந்து அலுவலக மேலாளர் விக்னேஷ் செய்திருந்தார்.
தேவதானப்பட்டி:-
மேரி மாதா கலை அறிவியல் கல்லூரியில் பொங்கல் விழா கல்லூரி முதல்வர் ஐசக்பூச்சாங்குளம் தலைமையில் நடந்தது. துணை முதல்வர் ஜோஷிபரம் தொட்,நிதி நிர்வாக மேலாளர் பிஜோய் மங்களத்து முன்னிலை வகித்தனர். விழாவில் அமெரிக்கா செயின்ட் தாமஸ் மினிஸ்டா பல்கலை பேராசிரியர் எட்வர்டு உல்ரிஸ் பங்கேற்றார். மாவட்டத்தில் போட்டியில் வெற்றி பெற்ற 40க்கும் அதிகமான அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், மதுரை காமராஜர் பல்கலை முதலிடம் பிடித்த மாணவர்களும் கவுரவிக்கப்பட்டனர்.

