/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வரதட்சணை கொடுமை போலீஸ்காரர் மீது வழக்கு
/
வரதட்சணை கொடுமை போலீஸ்காரர் மீது வழக்கு
ADDED : மார் 27, 2025 02:59 AM
போடி,:தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே அய்யம்பட்டியை சேர்ந்த சுதீர் கண்ணன் 27. பழநி பட்டாலியனில் போலீஸ்காரராக உள்ளார். இவருக்கும், மதுரை அருகே சித்துார் மேற்கு தெரு அழகு லட்சுமிக்கும் 26, கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. அழகு லட்சுமிக்கு வரதட்சணையாக 17 பவுன் நகை, சீர் வரிசை பொருட்கள் கொடுத்துள்ளனர்.
3 ஆண்டுகளுக்கு முன் இருவருக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு, போடி மகளிர் போலீசார் சுதீர் கண்ணன் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்தது. 2 மாதங்களுக்கு முன் இருவரும் சமரசம் பேசி வழக்கை வாபஸ் பெற கூறியதால் அழகுலட்சுமி அதனை வாபஸ் பெற்றுள்ளார்.
இந்நிலையில் சுதீர் கண்ணன் 15 நாட்களுக்கு முன் வரதட்சணையாக 40 பவுன் நகை, கார் வாங்கி வரச் சொல்லி துன்புறுத்தி உள்ளார். நகை வாங்கி வராவிட்டால் வேறொருவரை திருமணம் செய்ய போவதாக கூறி அழகு லட்சுமியை அடித்து கொடுமைபடுத்தினாராம். இது தொடர்பாக சுதீர் கண்ணன் மீது போடி மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.