/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
முல்லைப் பெரியாறு அணையில் நீர்திறப்பு 105 கன அடியாக குறைப்பு நீர் மின் நிலையத்தில் உற்பத்தி நிறுத்தம்

ADDED : மார் 27, 2025 03:07 AM
கூடலுார்,:முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழகப் பகுதிக்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 105 கன அடியாக குறைக்கப்பட்டது. இதனால் லோயர்கேம்ப் பெரியாறு நீர்மின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.
முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி 113 அடியாக இருந்தது. (மொத்த உயரம் 152 அடி). நீர்ப்பிடிப்பில் மழை பதிவாகவில்லை. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 127 கன அடி.நீர் இருப்பு 1392 மில்லியன் கன அடி. நீர்மட்டம் குறைந்து வருவதாலும், இரண்டாம் போக நெல் சாகுபடி முடிவுக்கு வந்துள்ள நிலையில் தமிழகப் பகுதிக்கு திறக்கப்பட்டிருந்த 278 கன அடி நீர், நேற்று காலையிலிருந்து 105 கன அடியாக குறைக்கப்பட்டது. தண்ணீர் குமுளி மலைப் பாதையில் உள்ள இரைச்சல் பாலம் வழியாக வெளியேறுகிறது. பகல் முழுவதும் நீர்பிடிப்பில் கடுமையான வெப்பம் நிலவியதால் அணையின் நீர்மட்டம் மேலும் குறையும் வாய்ப்புள்ளது.
மின் உற்பத்தி நிறுத்தம்
முல்லைப் பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவைப் பொறுத்து தேனிமாவட்டம் லோயர்கேம்ப் பெரியாறு நீர் மின் நிலையத்தில் மின் உற்பத்தி செய்யப்படும். இங்கு தலா 42 மெகாவாட் வீதம் நான்கு ஜெனரேட்டரில் 168 மெகாவாட் மின் உற்பத்தி செய்யலாம். தற்போது நீர் திறப்பு 105 கன அடியாக குறைக்கப்பட்டதால் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.