/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வீட்டில் புகையிலை பதுக்கியவர் கைது
/
வீட்டில் புகையிலை பதுக்கியவர் கைது
ADDED : ஜன 08, 2025 05:31 AM

--தேவதானப்பட்டி :   தேவதானப்பட்டி மேல்மந்தை 9வது வார்டைச் சேர்ந்தவர் ரவி 52. இவரது வீட்டில் பண்டல் பண்டலாக புகையிலை பாக்கெட்டுகள் பதுக்கி வைத்திருப்பதாக தேவதானப்பட்டி போலீசாருக்கு தகவல் சென்றது. எஸ்.ஐ., வேல் மணிகண்டன் தலைமையில்  போலீசார்கள் ரவி வீட்டினை சோதனையிட்டனர். அங்கு 12.375 கிலோ எடையுள்ள  825 புகையிலை பாக்கெட்டுகள் விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்தது கைப்பற்றப்பட்டு ரவியை கைது செய்தார்.
பெரியகுளத்தில் போலீசார் பெட்டிக்கடைகளில் பெயரளவு ரெய்டு நடத்தி கணக்கு காட்டுகின்றனர். மொத்த வியாபாரிகள் சிலர் பண்டல், பண்டலாக புகையிலை பதுக்கி  விற்பனை செய்கின்றனர்.  இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் புகையிலை புழக்கம் அதிகம் உள்ளது.

