மகனுடன் பெண் மாயம்
தேனி: கோட்டூர் காளியம்மன் கோயில் தெரு அபிராமி 29. இவரது கணவர் மனோஜ் 32. பத்து ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இத்தம்பதியினருக்கு 2 மகன்கள் உள்ளனர். தற்போது கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அபிராமி பெற்றோர் வீட்டில் தங்கியிருந்தார். அதன்பின் ஜன.2ல் அபிராமி, தனது மூத்த மகன் ஜித்துவுடன், வீடு திரும்ப வில்லை. தம்பி புகாரில் வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிந்து அபிராமி அவரது மகன் ஜித்து உள்ளிட்ட இருவரை தேடி வருகின்றனர்.
டூவீலர் திருட்டு
தேனி: காமயகவுண்டன்பட்டி தேவரப்ப கவுண்டர் தெரு மாரீஸ் 22. இவர் ஜன.4 இரவில் தனது வீட்டு வாசலில் ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள டூவீலரை நிறுத்தினார். பின் அருகில் இருந்த ஹோட்டலுக்கு சென்று வீடு திரும்பினார். அப்போது வீட்டில் நிறுத்தி இருந்த டூவீலரை காணவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதனால் மாரீஸ், ராயப்பன்பட்டி போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.
விபத்தில் பெண் காயம்
தேனி: பழனிசெட்டிபட்டி கிருஷ்ணன் கோயில் தெருவில் இந்திராணி 55. இவரது கணவர் ஈஸ்வரன் 57. எலக்ட்ரீசியன். இவர் ஜன.5ல் கோயிலுக்கு செல்வதற்காக கிருஷ்ணன் கோயில் அருகே நடந்து சென்றார். அப்போது அதேப்பகுதி சுப்பிரமணியசிவா தெருவை சேர்ந்த கனகா 31, ஓட்டி வந்த டூவீலர் இந்திராணி மீது மோதியது. இந்த விபத்தில் கீழே விழுந்த இந்திராணிக்கு காயங்கள் ஏற்பட்டன.108 ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு சேர்க்கப்பட்டு சிகிச்சையில் உள்ளார். பழனிசெட்டிபட்டி எஸ்.ஐ., மலரம்மாள் விபத்து நடத்திய கனகாவை கைது செய்தார்.----

