/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மதிப்பெண் பின் ஓடாமல் அறிவின் தேடலை ஆழமாக்கிட வேண்டும்
/
மதிப்பெண் பின் ஓடாமல் அறிவின் தேடலை ஆழமாக்கிட வேண்டும்
மதிப்பெண் பின் ஓடாமல் அறிவின் தேடலை ஆழமாக்கிட வேண்டும்
மதிப்பெண் பின் ஓடாமல் அறிவின் தேடலை ஆழமாக்கிட வேண்டும்
ADDED : ஜூன் 24, 2025 03:29 AM

தேனி: தேனி நாடார் சரஸ்வதி கலை, அறிவியில் கல்லுாரியில் இளங்கலை, முதுகலை முதலாமாண்டு வகுப்புகள் துவக்க விழா, பெற்றோர், மாணவிகள் வரவேற்பு விழா நடந்தது.
தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை தலைவர் தர்மராஜன் தலைமை வகித்தார்.
துணைத்தலைவர் ஜீவகன், பொதுச்செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் ராமசந்திரன் முன்னிலை வகித்தனர்.
கல்லுாரி செயலாளர் மாறன்மணி வரவேற்றார். கல்லுாரி முதல்வர் சித்ரா, டீன் கோமதி, துணைமுதல்வர் உமாகாந்தி பேசினர்.
சிறப்பு விருந்தினரான முன்னாள் மாணவியும், வட அமெரிக்கா ஏனா நிறுவன மேலாளர் நிரஞ்சனாதேவி பேசுகையில், 'மாணவிகள் மதிப்பெண்கள் பின் ஓடாமல் அறிவின் தேடலை ஆழமாக்கி, கிடைக்கும் வாய்ப்புகளை வசப்படுத்தி முன்னேற வேண்டும். நேர்மறை எண்ணங்களை கொண்டிருக்க வேண்டும். எதிர்காலத்தை நமக்கு ஏற்றார் போல் உருவாக்க முடியும் என்பதை புரிந்து செயல்பட்டு வெற்றி காண வேண்டும்,' என்றார். பேராசிரியை சரண்யா நன்றி கூறினார்.