/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
கருப்பசாமி பாண்டியன் உடலுக்கு பழனிசாமி அஞ்சலி
/
கருப்பசாமி பாண்டியன் உடலுக்கு பழனிசாமி அஞ்சலி
ADDED : மார் 28, 2025 02:32 AM
திருநெல்வேலி:திருநெல்வேலியில் நேற்று முன்தினம் காலமான அ.தி.மு.க. அமைப்புச்செயலாளர் கருப்பசாமி பாண்டியன் உடலுக்கு கட்சி பொதுச்செயலாளர் பழனிசாமி அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் பழனிசாமி கூறியதாவது:
கருப்பசாமி பாண்டியன் எம்.ஜி.ஆர்., மீது மிகுந்த மரியாதை கொண்டவர். அவர் காலத்தில் எம்.எல்.ஏ.,ஆக தேர்வு செய்யப்பட்டவர். மாவட்ட செயலராக இருந்தவர். ஜெ., காலத்தில் துணை பொதுச்செயலராக திறம்பட பணியாற்றியவர். கட்சியின் துாணாக விளங்கியவர். நான் முதல்வராக பொறுப்பேற்ற போது என்னை சந்தித்து தென் மாவட்டங்களில் உங்களுக்கு துணையாக நிற்பேன் எனக் கூறி எனக்கு வலிமை சேர்த்தவர். அவருடைய இழப்பு அ.தி.மு.க.,விற்கு பேரிழப்பாகும் என்றார். முன்னாள் அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, கடம்பூர் ராஜு , கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்