ADDED : செப் 18, 2025 12:24 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்குன்றம்:செங்குன்றம் அடுத்த பாடியநல்லுார் அருகே சீனிவாச பெருமாள் கோவில் உள்ளது. கடந்த 11ம் தேதி காலை, கோவிலுக்கு பக்தர்கள் வந்தபோது, கோவிலின் வெளிப்புறப் பகுதியில் உள்ள உண்டியல் உடைக்கப்பட்டு இருந்தது.
மேலும், கோவிலின் உட்புற பூட்டும் உடைக்கப்பட்டு, கருவறைக்குள் உள்ள சுவாமி சிலைக்கு அணிவித்து இருந்த நான்கு கிராம் தங்க சங்கிலி மற்றும் கோவிலில் இருந்த வெள்ளிப் பொருட்கள் திருடு போனது தெரிய வந்தது.
விசாரித்த செங்குன்றம் போலீசார், திருட்டில் ஈடுபட்ட கொளத்துார் தில்லை நகரைச் சேர்ந்த ஜெயபிரதாப், 19 மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலுாரைச் சேர்ந்த அரிகிருஷ்ணன், 23 மற்றும் பெரம்பூரைச் சேர்ந்த 17 வயது சிறுவனை கைது செய்து, பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நேற்று புழல் சிறையில் அடைத்தனர்.

