/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கழிவுநீர் கால்வாய் மீது அமைத்த பலகை உடைந்ததால் விபத்து அச்சம்
/
கழிவுநீர் கால்வாய் மீது அமைத்த பலகை உடைந்ததால் விபத்து அச்சம்
கழிவுநீர் கால்வாய் மீது அமைத்த பலகை உடைந்ததால் விபத்து அச்சம்
கழிவுநீர் கால்வாய் மீது அமைத்த பலகை உடைந்ததால் விபத்து அச்சம்
ADDED : செப் 18, 2025 12:25 AM

திருத்தணி:திருத்தணி நகராட்சிக்கு உட்பட்ட பாப்பாத்தியம்மன் கோவில் தெருவில் கழிவுநீர் கால்வாய் மீது அமைக்கப்பட்ட சிமென்ட் பலகை உடைந்துள்ளதால், அப்பகுதியினர் விபத்து அச்சத்தில் சென்று வருகின்றனர்.
திருத்தணி காந்திரோடு இரண்டாவது தெருவில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல, திருத்தணி நகராட்சி நிர்வாகம் சார்பில் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டு உள்ளது.
ஆறு மாதங்களுக்கு முன், இப்பகுதியில் உள்ள பாப்பாத்தி அம்மன் கோவில் தெருவில் கழிவுநீர் கால்வாய் மீது அமைக்கப்பட்ட சிமென்ட் பலகை உடைந்தது. இதனால், அவ்வழியாக வரும் பகுதிமக்கள், திறந்த நிலையில் உள்ள கழிவுநீர் கால்வாயில் விழுந்து அடிபடுவது தினமும் தொடர்கிறது.
இதுகுறித்து, நகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என, பகுதிமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இதுகுறித்து, அப்பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணி ஹேமாவதி கூறியதாவது:-
கழிவுநீர் கால்வாய் மீது அமைக்கப்பட்ட சிமைன்ட் பலகை சேதமடைந்து பல மாதங்களான நிலையில், அதை சீரமைக்காமல் அதிகாரிகள் அலட்சியமாக உள்ளனர். சில நாட்களாக கனமழை பெய்து வருவதால், தண்ணீருடன் கழிவுநீர் கலந்து வீடுகளில் புகுந்து விடுகிறது.
கால்வாய் துார்வராததால் தண்ணீர் தேங்கி தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், அவசர காலத்தில் மருத்துவமனைக்கு ஆட்டோ, இருசக்கரம் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள் ளது.
எனவே, சேதமடைந்த சிமென்ட் பலகையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

