/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கேசாவரம் அணையில் 300 கன அடி நீர் திறப்பு
/
கேசாவரம் அணையில் 300 கன அடி நீர் திறப்பு
ADDED : செப் 26, 2025 03:57 AM

கடம்பத்துார்:பேரம்பாக்கம் அடுத்த கேசாவரம் அணைக்கட்டில் இருந்து கூவம் ஆற்றுக்கு, 300 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
வேலுார் மாவட்டத்தில் உருவாகும் கல்லாறு, ராணிப்பேட்டை மாவட்டம் தக்கோலம் வழியாக கேசாவரம் அணைக்கட்டு பகுதியில் கூவம் ஆறு, கொசஸ்தலை ஆறு என, இரு ஆறுகளாக பிரிகிறது.
கேசாவரம் அணைக்கட்டில் நீர் நிரம்பினால், நேரடியாக கொசஸ்தலை ஆற்றில், செல்லும் நீர், பூண்டி ஏரிக்கு செல்கிறது.
இந்த அணைக்கட்டின் இன்னொரு புறம் அமைக்கப்பட்ட, 16 ஷட்டர்கள் வழியாக செல்லும் மழைநீர், கூவம் ஆறாக மாறி, நரசிங்கபுரம், பேரம்பாக்கம், புதுமாவிலங்கை, கடம்பத்துார், அதிகத்துார், மணவாளநகர், அரண்வாயல், புதுச்சத்திரம் வழியாக சென்னைக்கு செல்கிறது.
கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையில் தற்போது அணைக்கட்டில் மழைநீர் நிரம்பி 30 கன அடி நீர் வெளியேறி வருவதால் கொசஸ்தலை ஆற்றில் மழைநீர் வழிந்தோடுகிறது.
இதேபோல அணைக்கட்டின் மற்றொருபுறம் அமைக்கப்பட்டுள்ள 16 ஷட்டர்களில் 2 ஷட்டர்கள் மூலம் தலா 150 கன அடி வீதம் 300 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.