/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணி முருகன் கோவிலில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
/
திருத்தணி முருகன் கோவிலில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
திருத்தணி முருகன் கோவிலில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
திருத்தணி முருகன் கோவிலில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
ADDED : செப் 26, 2025 03:56 AM
திருத்தணி:முருகன் மலைக்கோவிலில் பக்தர்களுக்கு இடையூறாக வைக்கப்பட்டிருந்த கடைகளை கோவில் நிர்வாகம் நேற்று அதிரடியாக அகற்றியது.
திருத்தணி முருகன் கோவிலுக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை தரிசித்து செல்கின்றனர்.
இந்நிலையில் மலைக்கோவில் வளாகம் மற்றும் தேர்வீதியில் சிலர் பக்தர்களுக்கு இடையூறாக பழக்கடைகள், உருவ பொம்மைகள், திண்பண்டங்கள் மற்றும் கடைகள் வைத்து வியாபாரம் செய்து வந்தனர்.
கோவிலுக்கு செல்லும் பக்தர்களிடம் சில வியாபாரிகள் பொருட்களை வாங்கிச் செல்லுமாறும், கட்டாயப்படுத்துகின்றனர். இதுதவிர, பக்தர்கள் தேர்வீதி மற்றும் கோவிலுக்கு செல்லும் பாதையில் கடைகள் வைத்து வியாபாரம் செய்வதால் நடந்து செல்வதற்கும் சிரமப்பட்டு வந்தனர்.
இந்நிலையில் நேற்று திருத்தணி ஆர்.டி.ஓ., கனிமொழி, துணை தாசில்தார் தேவராஜ், கோவில் இணை ஆணையர் ரமணி மற்றும் கோவில் ஊழியர்கள் போலீஸ் பாதுகாப்புடன் மலைக்கோவில், தேர்வீதியில் வைக்கப்பட்டிருந்த கடைகளை அகற்றினர். இதனால் வியாபாரிகளுக்கும், ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் நடந்தது.