/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தரமான சிகிச்சை அளிக்க எம்.எல்.ஏ., அறிவுறுத்தல்
/
தரமான சிகிச்சை அளிக்க எம்.எல்.ஏ., அறிவுறுத்தல்
ADDED : ஜூன் 23, 2025 11:22 PM
திருத்தணிதிருத்தணி அரசு மருத்துவமனைக்கு நேற்று, திருத்தணி தி.மு.க.,- எம்.எல்.ஏ., சந்திரன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
திருத்தணி அரசு மருத்துவமனையில் நேற்று, அவசர சிகிச்சை பிரிவு, புறநோயாளிகள் பிரிவு, உள்நேயாளிகள் பிரிவு, ஆய்வகம், மருந்தகம் மற்றும் சமையல் தயாரிக்கும் அறை போன்ற இடங்களில், திருத்தணி தி.மு.க.,- எம்.எல்.ஏ., சந்திரன் ஆய்வு செய்து, சிகிச்சை முறைகள் கேட்டறிந்தார்.
தொடர்ந்து, உள்நோயாளிகளாக சிகிச்சை பெறுவோரிடம் குறைகளை கேட்டறிந்தார். பின், நோயாளிகளின் பிரச்னைகள் கேட்டறிந்து, தரமான சிகிச்சை அளிக்க வேண்டும் என, மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினார்.
அதேபோல், உள்நோயாளிகளுக்கு தரமான முறையில் உணவு வழங்க வேண்டும். மருத்துவமனையை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும் என, அறிவுறுத்தினார்.