/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
விரைவில் அரசு கல்லூரி கட்டப்படும் கூட்டத்தில் எம்.பி., திட்டவட்டம்
/
விரைவில் அரசு கல்லூரி கட்டப்படும் கூட்டத்தில் எம்.பி., திட்டவட்டம்
விரைவில் அரசு கல்லூரி கட்டப்படும் கூட்டத்தில் எம்.பி., திட்டவட்டம்
விரைவில் அரசு கல்லூரி கட்டப்படும் கூட்டத்தில் எம்.பி., திட்டவட்டம்
ADDED : ஜூன் 23, 2025 11:22 PM
திருவள்ளூர், ''திருவள்ளூரில் அரசு கலை கல்லுாரி அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, மாவட்ட வளர்ச்சி கூட்டத்தில் காங்., - எம்.பி., தெரிவித்தார்.
திருவள்ளூர் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம், திருவள்ளூர் காங்., - எம்.பி., சசிகாந்த் செந்தில் தலைமையில் நேற்று நடந்தது. கலெக்டர் பிரதாப் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில், மீஞ்சூர் ஒன்றியம் தத்தமஞ்சி ஊராட்சியில் துாய்மையான குடிநீர் வழங்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து, குடிநீர் வழங்கல் துறையினரிடம் விளக்கம் கேட்கப்பட்டது. பழவேற்காடு சூழலியலை பாதிக்கும் படியான திட்டங்களை அரசு செயல்படுத்த கூடாது.
மாவட்டம் முழுதும் நிலவும், தொடர் மின்தடையை தவிர்க்க வேண்டும் என, அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
அதன்பின் எம்.பி., கூறுகையில், “திருவள்ளூர் தொகுதியில் அரசு கலை, அறிவியல் கல்லுாரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. புட்லுார் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை நவீன முறையில் புதிதாக அமைக்கும் பணி துரிதப்படுத்தப்பட்டு உள்ளது,'' என்றார்.
நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயக்குமார், எம்.எல்.ஏ.,க்கள், துரை சந்திரசேகர் - பொன்னேரி, கிருஷ்ணசாமி - பூந்தமல்லி, கோவிந்தராஜன் - கும்மிடிப்பூண்டி, சுதர்சனம் - மாதவரம் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.