/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கடம்பத்துாரில் நிழற்குடை பராமரிப்பில் அலட்சியம்
/
கடம்பத்துாரில் நிழற்குடை பராமரிப்பில் அலட்சியம்
ADDED : ஜன 24, 2024 12:39 AM

கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியத்தில் திருப்பாச்சூர் - கொண்டஞ்சேரி, தண்டலம் - அரக்கோணம், திருவள்ளூர் - ஸ்ரீபெரும் புதுார், மப்பேடு - சுங்குவார்சத்திரம் என நான்கு நெடுஞ்சாலைகள் உள்ளது.
கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்ட 43 ஊராட்சி பகுதிகளில், பொதுமக்கள் பயன்பாட்டிற்காக நெடுஞ்சாலையோரம் நிழற்குடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த நிழற்குடைகள் போதிய பராமரிப்பு இல்லாததால், சேதமடைந்து விளம்பரங்கள் ஒட்டும் இடமாகவும் டிஜிட்டல் பேனர் வைக்கும் இடமாகவும் மாறியுள்ளது. சில இடங்களில் குடிமகன்களில் மதுக்கூடமாகவும் மாறியுள்ளது. இதனால் நிழற்குடைக்கு வரும் பயணியர் சிரமப்பட்டு வருகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஊராட்சி பகுதியில் ஆய்வு செய்து, நிழற்குடையை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
l பொதட்டூர்பேட்டையில் இருந்து திருத்தணி செல்லும் சாலையில், புச்சிரெட்டிபள்ளி மற்றும் ராமசமுத்திரம் இடையே, சிறுகுமி கூட்டு சாலை அமைந்துள்ளது. பேருந்து வசதி இல்லாத ராமசமுத்திரம், ஜி.பி.ஆர்.கண்டிகை மற்றும் ராமசமுத்திரம் சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்த பகுதிவாசிகள், இந்த கூட்டுச்சாலையில் இருந்து திருத்தணி, பொதட்டூர்பேட்டை மற்றும் ஒன்றிய தலைமையிடமான பள்ளிப்பட்டு உள்ளிட்ட பகுதிகளுக்கு பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
கூட்டுச்சாலையில் உள்ள பயணியர் நிழற்குடை, நீண்ட காலமாக பராமரிக்கப்படாமல் உருக்குலைந்து வருகிறது. நிழற்குடையின் மேல்தளம், கான்கிரீட் பெயர்ந்து உதிர்ந்து வருகிறது. பாதுகாப்பான புதிய நிழற்குடை கட்டப்பட வேண்டும் என பயணியர் எதிர்பார்க்கின்றனர்.

