/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அரசு பள்ளி வளாகத்தில் தேங்கும் மழைநீரால் மாணவ, மாணவியர் அவதி
/
அரசு பள்ளி வளாகத்தில் தேங்கும் மழைநீரால் மாணவ, மாணவியர் அவதி
அரசு பள்ளி வளாகத்தில் தேங்கும் மழைநீரால் மாணவ, மாணவியர் அவதி
அரசு பள்ளி வளாகத்தில் தேங்கும் மழைநீரால் மாணவ, மாணவியர் அவதி
ADDED : செப் 26, 2025 04:09 AM

திருத்தணி:அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்கி நிற்பதால் மாணவியர் சிரமப்படுகின்றனர்.
திருத்தணி அரசினர் மகளிர் மேல்நிலை பள்ளியில், 1,300 மாணவியர் படித்து வருகின்றனர். பள்ளி விளையாட்டு மைதானம் மற்றும் வளாகத்தில் ஒரு மணி நேரம் மழை பெய்தால், மழைநீர் குளம் போல் தேங்கி விடுகிறது .
தேங்கிய மழைநீரை வெளியேற்றுவதற்கு முறையாக கால்வாயும் அமைக்காததால், மழைநீர் ஒரு வாரத்திற்கு மேல் தேங்குவதால், மாணவியர் கடும் சிரமப்படுகின்றனர்.
கலெக்டர் பார்வையிட்டு நிரந்தரமாக தீர்வு காணவேண்டும் என பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.
திருமணிக்குப்பம் பகுதியில் அரசு பள்ளி எதிரே குளம்போல் கழிவுநீர் தேங்கியுள்ளதால் மாணவர்களுக்கு தொற்று நோய் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கடம்பத்துார் ஒன்றியத்துக்கு உட்பட்டது, திருமணிக்குப்பம் ஊராட்சி. இங்குள்ள நெடுஞ்சாலையோரம் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளி, கிளை நுாலகம், அங்கன்வாடி மையம் ஆகியன உள்ளன.
இப்பகுதியில் உள்ள நெடுஞ்சாலையோரத்தில் இருந்து வரும் மழைநீர் மற்றும் வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர், அரசு பள்ளி எதிரே குளம்போல் தேங்குகிறது. இதனால் ஏற்படும் துர்நாற்றத்தால் தொற்று நோய் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அரசு பள்ளி எதிரே குளம் போல் தேங்கியுள்ள கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அப்பகுதி மக்கள் மற்றும் மாணவ, மாணவியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.