/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ரயில் இன்ஜினின் மின் கம்பி உடைந்தது கும்மிடி மார்க்கத்தில் சேவை பாதிப்பு

ADDED : மார் 28, 2025 02:37 AM

எண்ணுார்:ரயில் இன்ஜினின் மின்சாரம் கடத்தும் கம்பி உடைந்து, உயர் மின் அழுத்த கம்பியில் சிக்கிக் கொண்டதால், கும்மிடிபூண்டி - சென்னை மார்க்கத்தில், மின்சார ரயில் சேவை, ஒன்றரை மணி நேரம் பாதிக்கப்பட்டது.
சென்னை, எண்ணுார் ரயில் நிலையம் அருகே, நேற்று மாலை, 4:00 மணிக்கு, அத்திப்பட்டில் இருந்து சென்னை நோக்கி ரயில் இன்ஜின் ஒன்று சென்றுக் கொண்டிருந்தது.
திடீரென, ரயில் இன்ஜினின் மின்சாரம் கடத்தும் 'பான்டோகிராப்' கம்பி உடைந்து, உயர் மின் அழுத்த கம்பியில் சிக்கிக் கொண்டது. இது குறித்து தகவலறிந்து, ரயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்தில் முகாமிட்டனர். மாற்று இன்ஜின் மூலம், பழுதான ரயில் இன்ஜின் இழுத்து செல்லப்பட்டது.
மேலும், உயர் மின் அழுத்த கம்பியில் சிக்கிக் கொண்ட, ரயில் இன்ஜினின் , பான்டோகிராப் கம்பியை, பத்திரமாக மீட்டனர். இதனால், கும்மிடிபூண்டியில் இருந்து சென்னை நோக்கி செல்லக் கூடிய, மின்சார ரயில்கள் போக்குவரத்து, ஒன்றரை மணி நேரம் பாதிக்கப்பட்டது. மாலை, 5:30 மணிக்கு பின், நிலைமை சீரடைந்தது.