/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நிழற்குடை இல்லாத நிறுத்தம் வெங்கத்துார் பயணியர் அவதி
/
நிழற்குடை இல்லாத நிறுத்தம் வெங்கத்துார் பயணியர் அவதி
நிழற்குடை இல்லாத நிறுத்தம் வெங்கத்துார் பயணியர் அவதி
நிழற்குடை இல்லாத நிறுத்தம் வெங்கத்துார் பயணியர் அவதி
ADDED : ஜூன் 24, 2025 07:36 PM
வெங்கத்துார்:திருமழிசை - ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையில், வெங்கத்துார் ஊராட்சி செல்லும் பேருந்து நிறுத்தத்தில், பயணியர் நிழற்குடை இல்லாததால் பகுதிமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
கடம்பத்துார் ஒன்றியத்துக்கு உட்பட்டது வெங்கத்துார் ஊராட்சி. இங்குள்ள திருமழிசை -- ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையில் உள்ள பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்தி, இப்பகுதிமக்கள் மற்றும் பள்ளி, கல்லுாரி மாணவ -- மாணவியர், திருவள்ளூர் மற்றும் பிற பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
பேருந்து நிறுத்தத்தில் உள்ள நிழற்குடை முறையான பராமரிப்பு இல்லாததால், சேதமடைந்து வீணாகி போனது. இதனால், இப்பகுதி மக்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.
குறிப்பாக, வெயில் மற்றும் மழை நேரங்களில் கடும் அவதிப்பட்டு வருவதோடு, குடைபிடித்தபடி பேருந்துக்காக காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து, பேருந்து நிறுத்தத்தில் பயணியர் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வெங்கத்துார் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.