/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணி அரசு கல்லுாரியில் 2ம் கட்ட கலந்தாய்வு துவக்கம்
/
திருத்தணி அரசு கல்லுாரியில் 2ம் கட்ட கலந்தாய்வு துவக்கம்
திருத்தணி அரசு கல்லுாரியில் 2ம் கட்ட கலந்தாய்வு துவக்கம்
திருத்தணி அரசு கல்லுாரியில் 2ம் கட்ட கலந்தாய்வு துவக்கம்
ADDED : ஜூன் 24, 2025 07:36 PM
திருத்தணி:திருத்தணி அரசு கல்லுாரியில், இரண்டாம் கட்டமாக 'ஆன்லைன்' வாயிலாக விண்ணப்பித்தவர்களுக்கு, நேற்று முதல் கலந்தாய்வு நடந்து வருகிறது.
திருத்தணி அரசினர் கலைக் கல்லுாரியில், நடப்பாண்டில் இளங்கலை பட்டப்படிப்பில் சேருவதற்கு, கடந்த மாதம் 7 - 27ம் தேதி வரை 'ஆன்லைன்' வாயிலாக, 4,912 மாணவர்கள் விண்ணப்பம் செய்திருந்தனர். இதில், மொத்தம் 948 மாணவ - மாணவியர் சேர முடியும்.
இவர்களுக்கான, 'கட்ஆப்' மதிப்பெண் வெளியிடப்பட்டது. கடந்த 2ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை மாணவர்களுக்கான கலந்தாய்வு நடந்தது. இதில், 421 மாணவ -மாணவியர் மட்டுமே சேர்ந்தனர்.
இரண்டாம் கட்டமாக, கடந்த மாதம் 30ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை 426 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்கான கலந்தாய்வு, நேற்று துவங்கி நாளை வரை நடக்கிறது.
நேற்று நடந்த சிறப்பு கலந்தாய்வில், மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் பங்கேற்றனர். இதில், மூன்று மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.