/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
கடலில் மூழ்கிய விசைப்படகு 9 மீனவர்கள் உயிருடன் மீட்பு
/
கடலில் மூழ்கிய விசைப்படகு 9 மீனவர்கள் உயிருடன் மீட்பு
கடலில் மூழ்கிய விசைப்படகு 9 மீனவர்கள் உயிருடன் மீட்பு
கடலில் மூழ்கிய விசைப்படகு 9 மீனவர்கள் உயிருடன் மீட்பு
ADDED : ஜூன் 21, 2025 11:44 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
துாத்துக்குடி:துாத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து விசை படகில் டிரைவர் ஆண்டோ உட்பட, 9 பேர் நேற்று அதிகாலை, மீன்பிடிக்க புறப்பட்டனர். வ.உ.சி., வெளித்துறைமுகம் அருகே அவர்கள் சென்றபோது, திடீரென பலத்த காற்று வீசியதால் படகின் அடிப்பகுதி சேதமடைந்தது.
இன்ஜின் இருக்கும் பகுதியில் கடல் நீர் புகுந்ததை அறிந்த ஆண்டோ, படகை கரையை நோக்கி செலுத்த துவங்கினார். காற்றின் வேகத்தாலும், படகில் தண்ணீர் புகுந்ததாலும், படகு கரைக்கு வரும் வழியில் முயல் தீவிற்கு கிழக்கே மூழ்க துவங்கியது.
இதில், படகில் இருந்த 9 பேரும், சக மீனவர்கள் வாயிலாக பத்திரமாக மீட்கப்பட்டனர்.