/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
த.வெ.க., நிகழ்ச்சியில் மாணவர்கள் பள்ளி சீருடையில் வந்ததால் சர்ச்சை
/
த.வெ.க., நிகழ்ச்சியில் மாணவர்கள் பள்ளி சீருடையில் வந்ததால் சர்ச்சை
த.வெ.க., நிகழ்ச்சியில் மாணவர்கள் பள்ளி சீருடையில் வந்ததால் சர்ச்சை
த.வெ.க., நிகழ்ச்சியில் மாணவர்கள் பள்ளி சீருடையில் வந்ததால் சர்ச்சை
ADDED : ஜூன் 21, 2025 03:06 AM

துாத்துக்குடி:பள்ளி நேரத்தில், அரசு உதவி பெறும் பள்ளி மாணவ - மாணவியரை சீருடையுடன் த.வெ.க., நிகழ்ச்சிக்கு அழைத்துச் சென்ற சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், த.வெ.க., தகவல் தொழில்நுட்ப அணி சார்பில், அக்கட்சி தலைவர் நடிகர் விஜய் பிறந்த நாள் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், பள்ளி மாணவ - மாணவியருக்கு சீருடை மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்க, கோவில்பட்டி செக்கடி தெரு பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ - மாணவியரை சீருடையுடன், ஆசிரியர்கள் அழைத்துச் சென்றனர்.
இந்த சம்பவம் பெற்றோர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக, சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்திடம் கோவில்பட்டி கல்வி மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் பாஸ்கரன் விளக்கம் கேட்டு விசாரணை நடத்தி வருகிறார்.