/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
'லிங்க்' அனுப்பி பணம் மோசடி தி.மு.க., நிர்வாகி, நண்பர் கைது
/
'லிங்க்' அனுப்பி பணம் மோசடி தி.மு.க., நிர்வாகி, நண்பர் கைது
'லிங்க்' அனுப்பி பணம் மோசடி தி.மு.க., நிர்வாகி, நண்பர் கைது
'லிங்க்' அனுப்பி பணம் மோசடி தி.மு.க., நிர்வாகி, நண்பர் கைது
ADDED : ஜூன் 20, 2025 01:46 AM

துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த வாலிபர் ஒருவரின் பேஸ்புக் முகவரியில், பகுதிநேர வேலை என விளம்பரம் வந்துள்ளது. அதில், குறிப்பிடப்பட்டிருந்த எண்ணை தொடர்பு கொண்டபோது, எதிர்முனையில் பேசிய நபர், 'ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம்' என, ஆசை வார்த்தை கூறி உள்ளார்.
மர்ம நபர் அனுப்பிய ஒரு லிங்க்கை கிளிக் செய்த வாலிபர், இணையதள பக்கத்தில், 1.50 லட்சம் ரூபாயை முதலீடு செய்துள்ளார். முதலீட்டிற்கான லாபம் ஏதும் வரவில்லை.
அந்த வாலிபர், துாத்துக்குடி 'சைபர் கிரைம்' போலீசில் புகார் செய்தார். சைபர் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். இதில், கோவில்பட்டி, கடலைக்கார தெருவை சேர்ந்த தி.மு.க., நகர இளைஞரணி அமைப்பாளர் ஜமாலுதீன், 30, அவரது நண்பர் கிங்ஸ்டன், 29, ஆகியோர் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இருவரையும் நேற்று கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பேரூரணி சிறையில் அடைத்தனர்.