/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
முன்னாள் பஞ்., தலைவர் லாரி ஏற்றி கொலை தி.மு.க., நிர்வாகி உட்பட 4 பேர் மீது வழக்கு
/
முன்னாள் பஞ்., தலைவர் லாரி ஏற்றி கொலை தி.மு.க., நிர்வாகி உட்பட 4 பேர் மீது வழக்கு
முன்னாள் பஞ்., தலைவர் லாரி ஏற்றி கொலை தி.மு.க., நிர்வாகி உட்பட 4 பேர் மீது வழக்கு
முன்னாள் பஞ்., தலைவர் லாரி ஏற்றி கொலை தி.மு.க., நிர்வாகி உட்பட 4 பேர் மீது வழக்கு
ADDED : ஜூன் 25, 2025 03:16 AM

துாத்துக்குடி:நிலத்தகராறில் அ.தி.மு.க.,வை சேர்ந்த முன்னாள் பஞ்., தலைவர் லாரி ஏற்றி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
துாத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் தாலுகா, கொல்லம்பரம்பு கிராமத்தை சேர்ந்தவர் முத்து பாலகிருஷ்ணன். 56; அ.தி.மு.க.,வை சேர்ந்த இவர், கொல்லம்பரம்பு பஞ்சாயத்து முன்னாள் தலைவர். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார்.
முத்துபாலகிருஷ்ணன் வீட்டில் இருந்து குறுக்குசாலை கிராமத்திற்கு பைக்கில் நேற்று சென்று கொண்டிருந்தார். சங்ககிரி விலக்கு பகுதியில் சென்றபோது, டிப்பர் லாரி நேருக்கு நேர் மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
ஒட்டப்பிடாரம் போலீசார் வழக்கு பதிவு செய்து, முத்து பாலகிருஷ்ணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக துாத்துக்குடி அரசு மருத்துவனைக்கு அனுப்பினர். விபத்து ஏற்படுத்தியதாக அதே பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் சவுந்திரராஜன், 49, என்பவரை போலீசார் கைது செய்தனர்.
இதற்கிடையே, நிலத்தகராறில் முத்து பாலகிருஷ்ணனுக்கும், சவுந்திரராஜனுக்கும் இடையே முன்விரோதம் இருந்ததால், அவர் தான் லாரியை ஏற்றி கொலை செய்துவிட்டதாக குடும்பத்தினர் குற்றம் சாட்டினர். போலீசார் அந்த கோணத்தில் விசாரணை நடத்தியதில், திட்டமிட்டு கொலை நடந்தது தெரியவந்தது.
கொலை தொடர்பாக, சவுந்திரராஜன் மற்றும் தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் பஞ்., தலைவர் கருணாகரன் உட்பட நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசார் கூறியதாவது:
கொல்லம்பரம்பு கிராமத்தில் பால்ராஜ் என்பவருக்கு சொந்தமான நிலத்தை சவுந்திரராஜன் அனுபவித்து வந்துள்ளார். அந்த நிலத்தை காற்றாலை நிறுவனத்தினர் கேட்டதால், முத்துபாலகிருஷ்ணன் விற்பனை செய்து பால்ராஜிடம் பணத்தை கொடுத்துள்ளார்.
தனக்கு தெரியாமல் நிலத்தை விற்றதால் முத்து பாலகிருஷ்ணன் மீது ஆத்திரத்தில் இருந்த சவுந்திரராஜன், கருணாகரன் உள்ளிட்டோர் சில நாட்களுக்கு முன் லாரியை ஏற்றி கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளனர்.
தற்போது நான்கு பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ளோம். விசாரணைக்கு பிறகே முழு விபரம் தெரியவரும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.