/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
அங்கன்வாடி பணியாளர்களின் கோரிக்கைகளை அரசு பரிசீலிக்கிறது: * அமைச்சர் கீதாஜீவன் தகவல்
/
அங்கன்வாடி பணியாளர்களின் கோரிக்கைகளை அரசு பரிசீலிக்கிறது: * அமைச்சர் கீதாஜீவன் தகவல்
அங்கன்வாடி பணியாளர்களின் கோரிக்கைகளை அரசு பரிசீலிக்கிறது: * அமைச்சர் கீதாஜீவன் தகவல்
அங்கன்வாடி பணியாளர்களின் கோரிக்கைகளை அரசு பரிசீலிக்கிறது: * அமைச்சர் கீதாஜீவன் தகவல்
ADDED : ஜூன் 25, 2025 01:42 AM
திண்டுக்கல்:''அங்கன்வாடி பணியாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசு பரிசீலித்து வருகிறது,'' என, திண்டுக்கல்லில் தமிழக அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார்.
திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பச்சிளம் குழந்தைகளின் உடல் நலனைக் காக்கவும், தவறான பாலூட்டும் முறைகளால் ஏற்படும் மரணங்களைத் தவிர்க்கவும், கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கான பயிற்சி முகாம் நடந்தது. முகாமை அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்தார்.
தொடர்ந்து அவர் அளித்த பேட்டி : அனைத்து குழந்தைகள் எடை, உயரம் உள்ளிட்ட தரவுகளை பதிவுசெய்ய புதிய செயலி அறிமுகப்படுத்தப்படுகிறது. கொத்தடிமைகளாக உள்ள குழந்தைகளை மீட்டு பாதுகாப்பது, படிக்க வைப்பது, பெற்றோருடன் சேர்ப்பது, குழந்தை உரிமை, குழந்தை கல்வி ஆகியவற்றில் முதல்வர் ஸ்டாலின் கவனம் செலுத்தி வருகிறார்.
அங்கன்வாடி பணியாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என கூறவில்லை. தமிழக அரசு பரிசீலனை செய்கிறது. இந்நிலையில் அவை எப்போது நிறைவேற்றப்படும் என்பதை நான் மட்டும் எப்படி சொல்ல முடியும். மாணவர்கள் ருத்ராட்சம், திருநீறு அணிந்து பள்ளிக்கு வரவேண்டும் என பா.ஜ., முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கூறியிருப்பது அவரவர் விருப்பத்தை பொருத்தது. பிரச்னை என்றால் முருகனிடம் செல்லவேண்டும் என்கிறார்கள். பின் அவர்களே முருகனை காப்பாற்ற போகிறோம் எனக்கூறுகிறார்கள். இதைவிட சிரிப்பு என்ன இருக்கும். பிரச்னை என்றால் கோயிலுக்கு சென்று முருகனை கும்பிடலாம். ஆனால் முருகனைக்காப்பாத்துவதற்கு நாம் யார் என்றார்.