/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பத்தூர்
/
நாட்டு வெடியை கடித்த நாய்கள் தலை சிதறி பலி
/
நாட்டு வெடியை கடித்த நாய்கள் தலை சிதறி பலி
ADDED : ஜூன் 21, 2025 02:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆம்பூர்:திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் அடுத்த மாதனுார் தேவிகாபுரத்தை சேர்ந்தவர் அ.தி.மு.க., மாவட்ட இணை செயலர் லலிதா குருவையன், 56. இப்பகுதியில் உள்ள இவரது மாந்தோப்பில், மூன்று நாய்களை வளர்த்து வந்தார்.
நேற்று காலை, திடீரென வெடி சத்தம் கேட்டதால், லலிதா குருவையன் சென்று பார்த்தபோது, மூன்று நாய்களும் தலை சிதறிய நிலையில் பலியானது தெரியவந்தது.
ஆம்பூர் வனத்துறையினர் விசாரணை நடத்தியதில், விலங்குகளை வேட்டையாட வைத்திருந்த நாட்டு வெடி குண்டுகளை நாய்கள் கடித்ததில் பலியானது தெரியவந்தது.
நாட்டு வெடிகுண்டு வைத்து சென்றவர்கள் யார் என, ஆம்பூர் வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.