/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பத்தூர்
/
நாயை துப்பாக்கியால் சுட்டு கொன்றவர் கைது
/
நாயை துப்பாக்கியால் சுட்டு கொன்றவர் கைது
ADDED : ஜூன் 21, 2025 02:31 AM
திருப்பத்துார்,:திருப்பத்துார் மாவட்டம், காக்கங்கரையைச் சேர்ந்தவர் ஜெகதீசன், 65. நேற்று முன்தினம் வீட்டின் முன் கட்டி வைத்திருந்த இவரது நாய், அதிக சத்தத்துடன் குரைத்தது. வெளியே வந்து பார்த்தபோது, அது இறந்து கிடந்தது.
அப்போது ஒருவர், நாயை துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பி ஓடினார். பின்னர், ஜெகதீசன் துரத்தி சென்று, அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தார்.
பிடிபட்டவர் பாச்சல் பஞ்.,க்குட்பட்ட இதயம் நகர் நரிக்குறவர் இனத்தை சேர்ந்த பகவதி, 24, என்பதும், இவர், காக்கங்கரை பகுதியில் வேட்டையாட சென்றபோது நாய் குரைத்ததால், ஆத்திரத்தில், நாயை சுட்டுக்கொலை செய்ததும் தெரியவந்தது.
அவர் வைத்திருந்த நாட்டு துப்பாக்கி உரிமம் இல்லாதது என தெரியவந்தது. அவரை கந்திலி போலீசார் கைது செய்தனர்.