/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாவட்ட மழலையர் போட்டி; பிரைட் பள்ளி 'குட்டீஸ்' அசத்தல்
/
மாவட்ட மழலையர் போட்டி; பிரைட் பள்ளி 'குட்டீஸ்' அசத்தல்
மாவட்ட மழலையர் போட்டி; பிரைட் பள்ளி 'குட்டீஸ்' அசத்தல்
மாவட்ட மழலையர் போட்டி; பிரைட் பள்ளி 'குட்டீஸ்' அசத்தல்
ADDED : செப் 18, 2025 12:24 AM

திருப்பூர்; மங்கலம் லிட்டில் ஸ்டார் இன்டர்நேஷனல் சி.பி.எஸ்.இ., பள்ளியில் மாவட்ட அளவிலான குழந்தைகள் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில் ப்ரீ கேஜி, எல்.கே.ஜி., மற்றும் யு.கே.ஜி., குழந்தைகளுக்கு, 30மீ., மற்றும் ஜிக் ஜாக் ஓட்டம் நடைபெற்றது. ஒன்று முதல், 5ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு, 50மீ., நின்று தாண்டுதல், டென்னிஸ், எறிபந்து, 200மீ., ஓட்டம் நடத்தப்பட்டது. இதில், திருப்பூர் காங்கயம் சாலை, விஜயாபுரம் பிரிவில் அமைந்துள்ள பிரைட் பப்ளிக் பள்ளி மாணவர்கள், பல்வேறு பிரிவுகளில் முதல் மூன்றிடம் தக்க வைத்து, பரிசு வென்றனர்.
ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை நடந்த 50மீ., ஓட்டம், தடை தாண்டும் ஓட்டம், டென்னிஸ், எறிபந்து உட்பட பல போட்டிகளில், பிரைட் பள்ளி மாணவ, மாணவியர் முதல் மூன்று இடங்களை பெற்று சாதனை புரிந்தனர்.
சாதித்த மாணவ, மாணவியருக்கு அன்பு அறக்கட்டளை தலைவர் மோகன், பொருளாளர் பாலசுப்ரமணியம், பள்ளி முதல்வர் மஹாலட்சுமி ஆகியோர் வாழ்த்தினர்.

