/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
முதுகலை பட்டப்படிப்பு விண்ணப்பம்; கல்லுாரி மாணவர்களுக்கு அழைப்பு
/
முதுகலை பட்டப்படிப்பு விண்ணப்பம்; கல்லுாரி மாணவர்களுக்கு அழைப்பு
முதுகலை பட்டப்படிப்பு விண்ணப்பம்; கல்லுாரி மாணவர்களுக்கு அழைப்பு
முதுகலை பட்டப்படிப்பு விண்ணப்பம்; கல்லுாரி மாணவர்களுக்கு அழைப்பு
ADDED : ஜூன் 24, 2025 11:55 PM
திருப்பூர்; திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன் அறிக்கை:
நடப்பு 2025 - -26ம் கல்வியாண்டுக்கான முதுநிலைப் பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கை விண்ணப்பம் www.pg.tngasa.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூலை, 15ம் தேதி. சந்தேகங்கள் இருப்பின் கல்லுாரியில் செயல்படும் மாணவர் சேர்க்கை மையத்தில் விண்ணப்பிக்கும் முறை குறித்து விபரங்களை நேரில் கேட்டறியலாம். விண்ணப்பக் கட்டணம் 60 ரூபாய்.
ஆன்லைன் பரிவர்த்தனையாகவும் விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தலாம். கல்லுாரியில் எம்.ஏ., தமிழ் இலக்கியம், ஆங்கில இலக்கியம், பொருளியல் தலா, 18 இடங்கள், எம்.காம்., - எம்.காம்., சர்வதேச வணிகம், விலங்கியல் தலா, 40, கணிதம், எம்.எஸ்.சி., கணினி அறிவியல் தலா 25, இயற்பியல் 30, வேதியியல் 16, ஆடை வடிவமைப்பு மற்றும் நாகரிகம் 20 ஆகிய முதுநிலைப் பட்ட இடங்கள் உள்ளது.
இளநிலைப்பட்ட வகுப்புகளில் கணிதம் பயின்றவர்கள் முதுநிலை கணினி அறிவியல் பட்ட வகுப்பில் சேர விண்ணப்பிக்கலாம். முதுநிலை ஆங்கில இலக்கியம், தமிழ் இலக்கியம் பாடப்பிரிவுகளில் சேர நான்கு பருவங்கள் தமிழ், ஆங்கிலம் பயின்றவர்களும் விண்ணப்பிக்கத் தகுதி உடையவர்கள்.
இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
3ம் கட்ட கவுன்சிலிங்
கல்லுாரியில் இளங்கலை பட்டப்படிப்பு மூன்றாம் கட்ட கவுன்சிலிங் இன்று நடக்கிறது.
மொத்தமுள்ள, 1008 இடங்களில், 940 இடங்கள் நிரம்பியுள்ளன. மீதமுள்ள 68 இடங்களுக்கு இன்று கவுன்சிலிங் நடக்கிறது. ஏற்கெனவே விண்ணப்பித்து இடம் கிடைக்காதவர், இதுவரை கவுன்சிலிங்கில் கலந்து கொள்ளாதவர், tngasa.in இணையதளத்தில் புதிதாக விண்ணப்பித்தவர் மூன்றாம் கட்டக் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.