/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தொழிலாளர் நலச்சட்ட அமலாக்கம்; சி.ஐ.டி.யு., மகாசபை தீர்மானம்
/
தொழிலாளர் நலச்சட்ட அமலாக்கம்; சி.ஐ.டி.யு., மகாசபை தீர்மானம்
தொழிலாளர் நலச்சட்ட அமலாக்கம்; சி.ஐ.டி.யு., மகாசபை தீர்மானம்
தொழிலாளர் நலச்சட்ட அமலாக்கம்; சி.ஐ.டி.யு., மகாசபை தீர்மானம்
ADDED : ஜூன் 24, 2025 11:54 PM
திருப்பூர்; பனியன் தொழிற்சாலைகளில், தொழிலாளர் நலச்சட்டம் அமலாக்கப்படுவதை, தொழிலாளர் துறை உறுதிப்படுத்த வேண்டுமென, சி.ஐ.டி.யு., வலியுறுத்தியுள்ளது.
திருப்பூர் சி.ஐ.டி.யு., பனியன் தொழிற்சங்கத்தின், 39வது தலைமை மகாசபை நடந்தது. சங்க தலைவர் மூர்த்தி தலைமை வகித்தார். துணை செயலாளர் செல்வன் வரவேற்றார். மாநில செயலாளர் கிருஷ்ணமூர்த்தி மகாசபையை துவக்கி வைத்தார்.
முன்னதாக, பனியன் தொழிற்சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். பனியன் பொது தொழிலாளர் சங்க தலைவராக உன்னிகிருஷ்ணன், பொதுசெயலாளராக சம்பத், பொருளாளராக நாகராஜ், துணை தலைவர்களாக பாண்டியராஜ், சஜினா, மாணிக்கம், சக்திவேல், செயலாளர்களாக சின்னசாமி, ராஜேஷ், செல்வன், துரைமுருகன் மற்றும் 21 பேர் நிர்வாக குழு உறுப்பினர் தேர்வு செய்யப்பட்டனர்.
பனியன் தொழிலாளருக்கு, தொழிலாளர் சட்டங்களை முழுமையாக அமல்படுத்த வேண்டும். தொழிலாளர் துறை கண்காணித்து, உறுதி செய்ய வேண்டும். எட்டு மணி நேர வேலைக்கு, 26 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்க வேண்டும். திருப்பூரில், மூன்று லட்சம் தொழிலாளர் இ.எஸ்.ஐ., சந்தாதாரராக உள்ளனர்.
இருப்பினும், இ.எஸ்.ஐ., மருத்துவமனை, 20 படுக்கை வசதியுடன் மட்டும் செயல்படுகிறது. அனைத்து வசதிகளுடன் கூடிய மருத்துவமனையாக மாற்ற வேண்டும். வரும், ஜூலை 9ம் தேதி நடக்கும் வேலை நிறுத்த போராட்டத்தை வெற்றிபெற செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.