/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குப்பை கொட்ட எதிர்ப்பு; பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
/
குப்பை கொட்ட எதிர்ப்பு; பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூன் 24, 2025 11:47 PM
அனுப்பர்பாளையம்; திருப்பூர் மாநகராட்சி பகுதியில் சேகரமாகும் குப்பைகள் நெருப்பெரிச்சல், ஜி.என்., கார்டனிலுள்ள மாவட்ட பத்திரப்பதிவு அலுவலகம் அருகில் உள்ள தனியார் பாறைக்குழியில் கொட்டப்பட்டு வருகிறது.
குப்பையால் துர்நாற்றம் வீசுகிறது. குடியிருக்க முடியவில்லை. எனவே, குப்பை கொட்ட கூடாது. என அப்பகுதி பொது மக்கள் மற்றும் அனைத்து கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மாநகராட்சி நிர்வாகம் குப்பை கொட்டுவதை உடனடியாக நிறுத்த வேண்டும்.
ஏற்கனவே கொட்டப்பட்டுள்ள குப்பை மீது முழுவதுமாக மண்ணை நிரப்பி சமன்படுத்திட வேண்டும். ஜி.என். கார்டன் பகுதி மக்களின் உடல் நலன் மற்றும் சுகாதாரத்தை பாதுகாத்திட வேண்டும் என்பது உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து கட்சியினர் மற்றும் பொதுமக்கள் சார்பில், நேற்று காலை நெருப்பெரிச்சல் ஜி.என் கார்டன் பஸ் நிறுத்தம் அருகில் கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மா.கம்யூ மாவட்ட குழு உறுப்பினர் சிகாமணி தலைமை வகித்தார். குப்புசாமி (இ.கம்யூ.,), கவிதா (கொ.ம.தே.க), பவுன்ராஜ் (தே.மு.தி.க.,), சிவகுமார் (பா.ஜ.,), சந்திரசேகர் (த.வெ.க.,), பஞ்சவர்ணம் (தமிழ்நாடு பத்திரம் மற்றும் நகல் எழுதுவோர் சங்கம்), செந்தில்குமார் (ஜி.என்.கார்டன் குடியிருப்போர் நல சங்கம்), சுரேஷ் (பனை காக்கும் நண்பர்கள் இயக்கம்), சரவணன் (நுகர்வோர் நல அமைப்பு) மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.
குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதியில் உள்ள கடைகள் மற்றும் வீடுகளில் கருப்பு கொடி கட்டப்பட்டிருந்தது.