/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வங்கதேசத்தினர் மூன்று பேர் கைது
/
வங்கதேசத்தினர் மூன்று பேர் கைது
ADDED : ஜூன் 24, 2025 11:51 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; திருப்பூர், முத்தணம்பாளையத்தில் வடமாநிலத்தினர் போர்வையில் வங்கதேசத்தினர் சிலர் தங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனால், அப்பகுதியில் ரோந்து மேற்கொண்டு கண்காணித்தனர். அதில், ஐயப்பன் நகரில் தங்கியிருந்த சிலரிடம் விசாரித்தனர்.
அதில், வங்கதேசத்தை சேர்ந்த ெகாகோன், 45, கபீர்ஹோசன், 35 மற்றும் முகமது சாண்டோ பிரமணிக், 18 என, மூன்று பேரும் உரிய ஆவணங்கள் இல்லாமல் முறைகேடாக தங்கியிருப்பது தெரிந்தது.
மேலும், கடந்த, மூன்று ஆண்டுகளுக்கு முன், திருப்பூர் வந்த அவர்கள் வாடகை வீடு எடுத்து, அதே பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர். மூன்று பேரையும் நல்லுார் போலீசார் கைது செய்தனர்.