/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருப்தியுடன் செல்கிறேன்... கலெக்டர் கிறிஸ்துராஜ் பேச்சு
/
திருப்தியுடன் செல்கிறேன்... கலெக்டர் கிறிஸ்துராஜ் பேச்சு
திருப்தியுடன் செல்கிறேன்... கலெக்டர் கிறிஸ்துராஜ் பேச்சு
திருப்தியுடன் செல்கிறேன்... கலெக்டர் கிறிஸ்துராஜ் பேச்சு
ADDED : ஜூன் 24, 2025 11:51 PM
திருப்பூர்; திருப்பூர் மாவட்ட கலெக்டராக கிறிஸ்துராஜ் கடந்த, 2023ம் ஆண்டு பதவியேற்று கொண்டார். கடந்த, இரு ஆண்டுகளாக பணியாற்றி வந்த அவர், தற்போது சுற்றுலா மற்றும் மேலாண்மை இயக்குனராக நியமிக்கப்பட்டார்.
இச்சூழலில், சென்னைக்கு மாறுதலாகி செல்ல உள்ள கலெக்டருக்கு நேற்று மாலை பிரிவு உபசார விழா, கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. டி.ஆர்.ஓ., கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். இதில், எஸ்.பி., கிரிஷ் யாதவ் அசோக் மற்றும் அனைத்து துறை சார்ந்த அதிகாரிகள் பலர் பங்கேற்று நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
விழாவில், கலெக்டர் கிறிஸ்துராஜ் பேசியதாவது:
கலெக்டர் என்பது பதவி அல்ல. அது ஒரு பெரும் பொறுப்பு. மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுக்கும் பொறுப்பு. அரசு அதிகாரிகள் எப்போதும் ஒரே இடத்திலேயே இருப்பதில்லை. பதவி உயர்வு பெற்று அடுத்தடுத்த நிலைகளுக்கு சென்று கொண்டிருக்க வேண்டும். அரசு பணிகளில் எந்த மாவட்டத்தில் பணிபுரிகிறோமோ, அந்த மாவட்டத்தில் உள்ள பொதுமக்களுக்கு நிறைவாக பணி செய்ய வேண்டும்.
திருப்பூர் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு நிறைவாக பணி செய்துள்ளேன் என்ற திருப்தி எனக்கு உள்ளது. மகிழ்ச்சியான தருணங்களுடன், திருப்பூர் மாவட்ட பொதுமக்களிடம் இருந்து விடைபெறுகிறேன்.
இவ்வாறு, அவர் பேசினார்.
முன்னதாக, கலெக்டருக்கு, காவல் துறை அதிகாரிகள், பின்னலாடை துறையினர், விவசாயிகள், அலுவலர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உட்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.