/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குடிநீர் வினியோகம் குளறுபடி; நலக்குழு கூட்டத்தில் புகார்
/
குடிநீர் வினியோகம் குளறுபடி; நலக்குழு கூட்டத்தில் புகார்
குடிநீர் வினியோகம் குளறுபடி; நலக்குழு கூட்டத்தில் புகார்
குடிநீர் வினியோகம் குளறுபடி; நலக்குழு கூட்டத்தில் புகார்
ADDED : ஜூன் 25, 2025 12:10 AM
திருப்பூர்; திருப்பூர் மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு கூட்டம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. ஆதிதிராவிடர் நல அலுவலர் புஷ்பாதேவி தலைமைவகித்தார். நலக்குழு உறுப்பினர்கள் கிருஷ்ணமூர்த்தி, சகாதேவன், வேலுசாமி, நீலமலை உள்ளிட்டோர், பிரச்னைகள், கோரிக்கைகளை குறிப்பிட்டு பேசினர்.
நலக்குழு உறுப்பினர்கள் பேசியதாவது:
பொங்கலுார் ஒன்றியத்தில், அலகுமலை, கண்டியன் கோவில், தெற்கு அவிநாசிபாளையம், தொங்குட்டிபாளையம், பெருந்தொழுவு, உகாயனுார் உள்ளிட்ட கிராமங்களில், பத்து முதல் 15 நாட்களுக்கு ஒருமுறையே குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. மோட்டார் பழுது, குழாய் உடைப்பு என பல்வேறு காரணங்கள் கூறுகின்றனர். மக்களுக்கு அத்திக்கடவு திட்ட குடிநீர் சீராக கிடைக்கச் செய்ய வேண்டும். ஆதிதிராவிட மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் சமுதாய நலக்கூடங்கள் அமைக்க வேண்டும். காங்கயம் ஒன்றியம், ஊதியூரில், மாணவர்களின் பாதுகாப்பு கருதி, பள்ளி அருகே வேகத்தடை அமைக்கவேண்டும். சரியான பயனாளிகளுக்கு, விரைந்து பட்டா வழங்க வேண்டும், என்றனர்.