/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஓடும் பஸ்சில் நகை திருட்டு; வசமாக சிக்கிய பெண் கைது
/
ஓடும் பஸ்சில் நகை திருட்டு; வசமாக சிக்கிய பெண் கைது
ஓடும் பஸ்சில் நகை திருட்டு; வசமாக சிக்கிய பெண் கைது
ஓடும் பஸ்சில் நகை திருட்டு; வசமாக சிக்கிய பெண் கைது
ADDED : செப் 16, 2025 11:38 PM

அவிநாசி; பஸ்சில் பயணம் செய்த பெண்ணின் பையில் இருந்து ஒன்பது சவரன் நகையை திருடிய பெண் கைது செய்யப்பட்டார்.
கோவை மாவட்டம், அன்னுார், தென்னம்பாளையத்தை சேர்ந்தவர் ராஜலட்சுமி, 61. கடந்த, 9ம் தேதி உறவினரின் வீட்டுக்கு செல்ல அன்னுாரில் இருந்து திருப்பூர் செல்லும் அரசு பஸ்சில் பயணித்தார்.
பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்ததால், ராஜலட்சுமி தனது கைப்பையை, உட்கார்ந்திருந்த பெண் ஒருவரிடம் கொடுத்தார். அவர் கருவலுாரில் இறங்கி விட்டார். அதன்பின், பையில் பார்த்ததில், 9 சவரன் நகையை காணவில்லை. இதனால், அதிர்ச்சி அடைந்த ராஜலட்சுமி அவிநாசி போலீசில், நடந்த விவரங்களை கூறி, புகார் கொடுத்தார்.
அவிநாசி குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, நகையை திருடிய, புளியம்பட்டி - ஜெ.ஜெ. நகரை சேர்ந்த விஜய் என்பவரின் மனைவி காமாட்சி, 44, என்பவரை கைது செய்து, 9 சவரன் நகையை மீட்டனர்.

