sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 20, 2025 ,புரட்டாசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

வேலூர்

/

தண்டவாள பராமரிப்பு பணிக்கு மெமு ரயில் சேவைகள் ரத்து

/

தண்டவாள பராமரிப்பு பணிக்கு மெமு ரயில் சேவைகள் ரத்து

தண்டவாள பராமரிப்பு பணிக்கு மெமு ரயில் சேவைகள் ரத்து

தண்டவாள பராமரிப்பு பணிக்கு மெமு ரயில் சேவைகள் ரத்து


ADDED : ஜூன் 16, 2025 03:17 AM

Google News

ADDED : ஜூன் 16, 2025 03:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேலுார்: காட்பாடி ரயில்வே நிலைய யார்டு பகுதியில், தண்டவாள பராமரிப்புக்காக, வேலுார், காட்பாடி வழியாக இயக்கப்படும். 4 மெமு ரயில் சேவைகள் முழுமையாகவும், 2 மெமு ரயில் சேவைகள் பகுதியாகவும் ரத்து செய்யப்படுவதாக, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இது குறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கை:

வேலுார் மாவட்டம், காட்பாடி - ஜோலார்பேட்டை இடையே காட்பாடி ரயில்வே யார்டு அருகில் தண்டவாள பராமரிப்பு பணி நடக்கிறது. இதனால், ரயில் சேவைகளில் தற்காலிக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

* காட்பாடியிலிருந்து இரவு, 9:10 மணிக்கு திருப்பதி நோக்கி செல்லும் காட்பாடி - திருப்பதி மெமு ரயில் மற்றும், திருப்பதியில் இருந்து, இரவு, 7:10 மணிக்கு காட்பாடி நோக்கி செல்லும் திருப்பதி - காட்பாடி மெமு ரயில் இன்று, 16ம் தேதி மற்றும் 18ம் தேதி முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

* சென்னை கடற்கரையில் இருந்து மாலை, 6:00 மணிக்கு புறப்பட்டு அரக்கோணம், சோளிங்கர், வாலாஜா ரோடு, காட்பாடி, வேலுார் கண்டோன்ட்மென்ட், கண்ணமங்கலம், போளூர் வழியாக, திருவண்ணாமலை சென்றடையும், சென்னை கடற்கரை, -- திருவண்ணாமலை மெமு ரயில் சேவை, இன்று, 16ம் தேதி, மற்றும் 18ம் தேதி முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

* திருவண்ணாமலையில் இருந்து, அதிகாலை, 4:30 மணிக்கு புறப்பட்டு, போளூர் - கண்ணமங்கலம், பென்னாத்துார், வேலுார் கண்டோன்மென்ட், காட்பாடி, சோளிங்கர், அரக்கோணம் வழியாக, தாம்பரம் வரை செல்லும், திருவண்ணாமலை - தாம்பரம் மெமு ரயில், நாளை, 17 மற்றும், 19ம் தேதி முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

* அரக்கோணத்திலிருந்து, இரவு, 9:00 மணிக்கு புறப்பட்டு, காட்பாடி நோக்கி செல்லும், அரக்கோணம் - காட்பாடி மெமு ரயில் சேவை, இன்று, 16 மற்றும் 18ம் தேதி சேவூருடன் நிறுத்தப்படுகிறது.

* விழுப்புரத்திலிருந்து, இரவு, 7:10 மணிக்கு புறப்பட்டு, திருவண்ணாமலை, போளூர், வேலுார், வழியாக, காட்பாடி வரை செல்லும் விழுப்புரம் - காட்பாடி மெமு ரயில் இன்று, 16 மற்றும், 18ம் தேதி வேலுாருடன் நிறுத்தப்படுகிறது.

இவ்வாறு, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us