/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
திருமணம் முடிந்த மறுநாளே பெண் காதலனுடன் ஓட்டம்
/
திருமணம் முடிந்த மறுநாளே பெண் காதலனுடன் ஓட்டம்
ADDED : ஜூன் 15, 2025 01:48 AM
வேலுார்,:வேலுார் அருகே திருமணமான மறுநாளே, புதுப்பெண் காதலனுடன் ஓட்டம் பிடித்தார்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த ஆத்துாரை சேர்ந்தவர் சதீஷ், 28. இவருக்கும், வேலுார் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த பாட்டையூரை சேர்ந்த ரேகா, 23, என்பவருக்கும் ஜூன் 8ம் தேதி, ஆரணியில் திருமணம் நடந்தது. மறுநாள், 9ம் தேதி சதீஷ், மனைவி ரேகாவுடன் பாட்டையூரில் உள்ள மாமியார் வீட்டுக்கு சென்றார்.
அப்போது, வீட்டிலிருந்து வெளியே சென்ற ரேகா, மீண்டும் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், ரேகாவை பல இடங்களில் தேடினர். எங்கும் கிடைக்கவில்லை. சதீஷ், கடந்த, 12ல் வேலுார் தாலுகா போலீசில் புகார் செய்தார்.
போலீசார் நடத்திய விசாரணையில், அணைக்கட்டு அடுத்த தேவகாரன்பட்டியை சேர்ந்த அவரது காலதனுடன் ரேகா சென்றது தெரியவந்தது. போலீசார் அவரை தேடி வருகின்றனர்.