/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
தண்டவாளத்தை கடக்க முயன்ற போலீஸ்காரர் ரயில் மோதி பலி
/
தண்டவாளத்தை கடக்க முயன்ற போலீஸ்காரர் ரயில் மோதி பலி
தண்டவாளத்தை கடக்க முயன்ற போலீஸ்காரர் ரயில் மோதி பலி
தண்டவாளத்தை கடக்க முயன்ற போலீஸ்காரர் ரயில் மோதி பலி
ADDED : ஜூன் 13, 2025 02:25 AM
வேலுார்:வேலுார் அருகே, தண்டவாளத்தை கடக்க முயன்ற, சிறப்பு காவல்படை போலீஸ்காரர் ரயில் மோதி பலியானார்.
வேலுார் மாவட்டம், காட்பாடி அடுத்த சேவூரில், தமிழக சிறப்பு காவல் படை, ஒன்பதாவது பட்டாலியன் இயங்கி வருகிறது.
இதில், இரண்டாம் நிலை காவலராக, திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி தச்சூர் சமத்துவபுரத்தை சேர்ந்த கார்த்திகேயன், 30, கடந்த, 2022ம் ஆண்டிலிருந்து பணியாற்றி வந்தார்.
நேற்று மாலை, 5:00 மணியளவில், சேவூர் ரயில் ரயில்வே ஸ்டேஷன் அருகே பணி முடிந்து ரயிலில், வீட்டிற்கு செல்ல தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, ரயில் மோதி பலியானார்.
காட்பாடி ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பலியான கார்த்திகேயன், கடந்த பிப்., 8ல், தன் நண்பர்களுடன் காவலர் சீருடையில் வழிப்பறியில் ஈடுபட்டதாக, ஆற்காடு போலீசாரால் கைது செய்யப்பட்டு, தற்போது ஜாமினில் வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.