/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வீட்டில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு
/
வீட்டில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு
ADDED : ஜூலை 05, 2025 06:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : விழுப்புரத்தில் வீட்டில் புகுந்த விரியன் பாம்பை தீயணைப்பு துறையினர் பிடித்து காட்டில் விட்டனர்.
விழுப்புரம், வழுதரெட்டி, நேதாஜி நகரை சேர்ந்தவர் தேவசேனா; இவரது வீட்டில் நேற்று முன்தினம் இரவு, 3 அடி நீளம் உள்ள விரியன் பாம்பு புகுந்தது.
தகவலறிந்த தீயணைப்பு நிலைய சிறப்பு அலுவலர் ராஜவேலு மற்றும் வீரர்கள் ராஜுவ்காந்தி, விஜயன், ஆனந்தகிருஷ்ணன், கார்த்திகேயன் ஆகியோர் விரைந்து சென்று பாம்பை பிடித்தனர். தொடர்ந்து, அந்த பாம்பை காப்பு காட்டில் விட்டனர்.