/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வாங்குவோர், விற்போர் சந்திப்பு கூட்டம் ரூ.68 லட்சத்தில் 57 புரிந்துணர்வு ஒப்பந்தம்
/
வாங்குவோர், விற்போர் சந்திப்பு கூட்டம் ரூ.68 லட்சத்தில் 57 புரிந்துணர்வு ஒப்பந்தம்
வாங்குவோர், விற்போர் சந்திப்பு கூட்டம் ரூ.68 லட்சத்தில் 57 புரிந்துணர்வு ஒப்பந்தம்
வாங்குவோர், விற்போர் சந்திப்பு கூட்டம் ரூ.68 லட்சத்தில் 57 புரிந்துணர்வு ஒப்பந்தம்
ADDED : மார் 26, 2025 04:01 AM

விழுப்புரம் : விழுப்புரத்தில் மாவட்ட அளவிலான வாங்குவோர், விற்போர் சந்திப்பு கூட்டத்தில் 47 வணிக பிரதிநிதிகளுடன், 68 லட்சம் ரூபாயில் 57 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் மகளிர் சுய உதவிக்குழுவினர் தொழில்களை விரிவுபடுத்த, விற்பனையை அதிகரிக்கவும் புதிய சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்திடும் வகையில் வாங்குவோர், விற்போர் சந்திப்பு கூட்டம் நடந்தது.
கலெக்டர் ஷேக்அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கி பேசியதாவது:
விழுப்புரம் மாவட்டத்தில் வங்கி கடனுதவிகள் பெற்று தொழில் செய்து வரும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் கற்பூரம், ஊதுபத்தி, பாரம்பரிய அரிசி, சிறுதானிய பொருட்கள், ஊறுகாய், தின்பண்டங்கள், மண்பாண்டங்கள், ஆயத்த ஆடைகள், அலங்கார நகைகள், அழகுசாதன பொருட்கள், சணல் மற்றும் துணி பைகள், வீட்டு உபயோக பொருட்கள் என பல்வேறு பொருட்களை தயாரிப்பதுடன், பல தொழில்களை செய்து வருகின்றனர்.
உற்பத்தியை மேற்கொள்ள முன்பு வாடிக்கையாளர் என மனதில் நினைத்துக்கொண்டு, பொருளை உற்பத்தி செய்திட வேண்டும். அப்போதுதான் நீங்கள் உற்பத்தி செய்த பொருட்கள், வாடிக்கையாளர்கள் வாங்கக்கூடிய மன நிலையை உருவாக்கும்.
போட்டிகள் நிறைந்த உலகில், தங்கள் பொருட்கள் குறித்து முழுமையாக விளம்பரப்படுத்தி, அதன் சிறப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும்.
காலத்திற்கேற்றவாறும் பொதுமக்களின் எண்ணத்திற்கேற்றவாறும் புதுப்புது பொருட்களை தயாரித்து விற்பனை செய்யும் நிலையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் பேசினார்.
கூட்டத்தில், 13 தாலுகாக்களைச் சேர்ந்த 152 மகளிர் சுய உதவிக் குழுக்கள், தங்களது உற்பத்தி பொருட்களை காட்சிப்படுத்தியிருந்தனர்.
மகளிர் சுயஉதவிக்குழு தயாரித்த பொருட்களுக்கு, 47 வணிகர் சங்க பிரதிநிதிகளுடன் 68 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 57 புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
மகளிர் திட்ட இயக்குனர் சுதா மற்றும் அலுவலர்கள், வணிகர் சங்க கூட்டமைப்பினர் உட்பட பலர் பங்கேற்றனர்.