ADDED : செப் 25, 2025 11:35 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவலுார்பேட்டை: பெண்ணிடம், 2 சவரன் செயின் திருடிய மர்ம நபர்கள் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் கடந்த, 21 ம்தேதி இரவு அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடந்தது. அன்றைய தினம் சென்னை ஆவடியை சேர்ந்த சேகர் மனைவி சரஸ்வதி, 45; சாமி தரிசனம் செய்ய வந்தார்.
அப்போது, வழிபாட்டின் போது, அவரது கழுத்திலிருந்த 2 சவரன் தாலி செயினை மர்ம நபர்களை திருடி சென்றனர்.
இது குறித்த புகாரின் பேரில் மேல்மலையனுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.