ADDED : செப் 25, 2025 11:36 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: பொது இடத்தில் ஆபாசமாக பேசிய, 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
வளவனுார் பகுதியில், குற்றச்சம்பங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், சப் இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் போலீசார், நேற்று முன்தினம் சிறுவந்தாடு பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது, சிந்து நகர் பகுதியில் மது போதையில், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில், விழுப்புரம் இந்திரா நகரை சேர்ந்த சுரேஷ் மகன் தயா, 20; மதியழகன் மகன் ரத்தினகுமார், 17; மாம்பழப்பட்டு ரோடு தேவராஜ் மகன் கிருஷ்ணராஜ்,17; ஸ்டாலின் நகர் நாகராஜ் மகன் யுகன்ராஜ், 17; இந்திரா நகர் சங்கர் மகன் சஞ்சய், 17; ஆகியோர், ஆபாசமாக பேசிக்கொண்டிருந்தனர்.
இதனையடுத்து, போலீசார், 5 பேர் மீதும் வழக்கு பதிந்து, அவர்களை கைது செய்தனர்.