ADDED : செப் 25, 2025 11:36 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் தாலுகா அலுவலகத்தில் வருவாய்த்துறையினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மண்டல துணை தாசில்தார் பாலச்சந்தர் தலைமை வகித்தார்.
வட்ட சார் ஆய்வாளர் சக்திவேல் முருகன், மாவட்ட வி.ஏ.ஓ சங்கத்தலைவர் லோகேஷ் முன்னிலை வகித்தனர்.
பெரா அமைப்பு ஒருங்கிணைப்பாளர் ராஜசேகர் வரவேற்றார். இந்த போராட்டத்தில், வருவாய்துறை அலுவலர்கள், பல்வேறு கோரிக்கைகள் குறித்து கோஷங்களை எழுப்பினர்.
இதில் வி.ஏ.ஓ., சங்க நிர்வாகி சத்தியேந்திரன், வருவாய் ஆய்வாளர் சுசீலா மற்றும் கண்டாச்சிபுரம் தாலுகா அலுவலக ஊழியர்கள்,வி.ஏ.ஒ.,க்கள் உள்ளிட்டோர், கலந்துகொண்டனர்.