/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
செல்லையன் சிலைக்கு எம்.எல்.ஏ., மாரியாதை
/
செல்லையன் சிலைக்கு எம்.எல்.ஏ., மாரியாதை
ADDED : ஜூன் 25, 2025 01:13 AM

விழுப்புரம் : தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., தந்தை நினைவு தினத்தையொட்டி, அவரது உருவ சிலைக்கு மத்திய மாவட்ட பொறுப்பாளர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
விழுப்புரம் தி.மு.க., மாநில ஆதிதிராவிடர் நலக்குழு இணை செயலாளர், முன்னாள் எம்.எல்.ஏ., புஷ்பராஜ் மற்றும் நகர இளைஞர் அணி அமைப்பாளர் மணிகண்டன் ஆகியோரின் தந்தை செல்லையன் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
இதில், அவரது இல்லத்தில் உள்ள செல்லையன் உருவ சிலைக்கு, தி.மு.க., விழுப்புரம் மத்திய மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
கிழக்கு நகர கழக பொறுப்பாளர் வெற்றிவேல், கோலியனுார் ஒன்றிய சேர்மன் சச்சிதானந்தம், ஒன்றிய பொறுப்பாளர் ராஜா, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் கேசவன், வார்டு செயலாளர் ரவிச்சந்திரன், நகர்மன்ற கவுன்சிலர் நவநீதம் மணிகண்டன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.