நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : கழிவுநீர் குடியிருப்புகளில் புகுவதை தடுக்கக்கோரி, கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
விழுப்புரம் புரட்சி பாரதம் கட்சி மற்றும் நகராட்சி 18 வது வார்டு ஊரல்கரைமேடு பகுதி பொதுமக்கள் கொடுத்துள்ள மனுவில்; எங்கள் பகுதி குட்டையில் கழிவுநீர் கலக்கிறது.
மழைக் காலங்களில் இந்த கழிவுநீர் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்துவிடுகிறது. இதனால், தொற்றுநோய் ஏற்படுகிறது. எனவே, குட்டையை சீரமைத்து ஓடைக்கு தண்ணீர் செல்ல கால்வாய் அமைக்க வேண்டும் என அதில் கூறப்பட்டு இருந்தது.