/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரம் அரசு பொறியியல் கல்லூரியில் இன்ஜி., சேர்க்கை ஆன்லைன் பதிவு துவக்கம்

ADDED : மே 10, 2025 12:43 AM

விழுப்புரம்: விழுப்புரம் அண்ணா பல்கலை., அரசு பொறியியல் கல்லூரி மையத்தில், இன்ஜினியரிங் படிப்புக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் பணி துவங்கியது.
விழுப்புரம் அண்ணா பல்கலை., அரசு பொறியியல் கல்லூரியில், தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான பதிவு மையம் (டி.என்.இ.ஏ., பெசிலிடேஷன் சென்டர்) துவங்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில், ஆன்லைன் மூலம் விண்ணப்பம் பதிவு செய்யும் பணி துவங்கி உள்ளது.
கல்லூரி முதல்வர் செந்தில், ஆன்லைன் பதிவை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், மைய ஒருங்கிணைப்பாளர் கவிதா, இணை ஒருங்கிணைப்பாளர் பழனி உடனிருந்தனர்.
இம்மையத்தில், மாணவர்களுக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் பதிவு செய்யும் பணி, தினசரி காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை, வாரத்தின் அனைத்து நாட்களிலும் நடக்கும். விண்ணப்ப பதிவு கட்டணமாக எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களுக்கு ரூ.250ம், பிற பிரிவு மாணவர்களுக்கு ரூ.500ம் செலுத்த வேண்டும்.
வரும் ஜூன் 6ம் தேதி வரை இந்த ஆன்லைன் பதிவு நடக்கும் என்பதால், இன்ஜினியரிங் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள், இந்த மையம் மூலம் விண்ணப்பங்களை பதிவு செய்து பயன்பெறுமாறு, மைய ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.