/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கல்லுாரி கனவு நிகழ்ச்சிக்கு முன் திட்டமிடல் ஆலோசனை
/
கல்லுாரி கனவு நிகழ்ச்சிக்கு முன் திட்டமிடல் ஆலோசனை
கல்லுாரி கனவு நிகழ்ச்சிக்கு முன் திட்டமிடல் ஆலோசனை
கல்லுாரி கனவு நிகழ்ச்சிக்கு முன் திட்டமிடல் ஆலோசனை
ADDED : மே 10, 2025 12:44 AM

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் நான் முதல்வன் - உயர்கல்வி வழிகாட்டி திட்டத்தின் கீழ் 'கல்லுாரி கனவு' நிகழ்ச்சி நடத்துவது தொடர்பாக முன் திட்டமிடல் ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
கூட்டத்தில், கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கி பேசியதாவது:
நான் முதல்வன் - உயர்கல்வி வழிகாட்டி திட்டத்தின் கீழ் 'கல்லுாரி கனவு' நிகழ்ச்சியை அனைத்து மாவட்டங்களிலும் வரும் 12ம் தேதி முதல் 16ம் தேதி வரை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் இந்நிகழ்ச்சியை 4 கட்டங்களாக விழுப்புரம், மயிலம், செஞ்சி, திண்டிவனம் பகுதிகளில் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளி கல்வி துறையால் அடையாளம் காணப்பட்ட விழுப்புரம் மாவட்டத்தில் 5,458 மாணவர்களும் நான் முதல்வன் - உயர்கல்வி வழிகாட்டி மூலம் கல்லுாரி கனவு நிகழ்ச்சி நடத்தி ஊக்குவித்து உயர்கல்வியில் சேர்வதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
தற்போது பிளஸ் 2 முடித்துள்ள மாணவ, மாணவியர் அனைவரும் நுாறு சதவீதம் உயர்கல்வியில் சேர்க்கை செய்வதே 'கல்லுாரி கனவு' நிகழ்வின் நோக்கமாகும்.
இந்த முகாமில் தமிழக அரசால் செயல்படுத்தப்படும் புதுமைப் பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம், நான் முதல்வன் திட்டம் மூலம் உயர் கல்விக்காக வழங்கப்படும் ஊக்கத் தொகைகள் குறித்தும், விடுதி வசதி, கல்விக் கடன், கல்வி உதவித்தொகை போன்றவை குறித்து துறை அலுவலர்கள் மூலம் மாணவ, மாணவிகள், பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் பேசினார்.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவழகன், உதவி இயக்குநர் (வேலை வாய்ப்பு) பாலமுருகன் உட்பட அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.